Life is a color changing dew

தலைப்பு:- வாழ்க்கை ஒரு நிறமாறும் பனித்துளி

"வாழ்க்கை என்றால் என்ன?", இதய நதியில் நீந்தும் சுவாச மீன்களின் குமிழிகளா?, பூவுக்கும் முள்ளுக்கும் இடையிலான ஏழு நாள் காதல் கதையா?, மானிட இதழ்களில் தவழும் புன்னகையின் தேன் சுவையா?, கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரின் சிநேகமா?, பிரமாண்டமான நினைவுகளின் சித்திர மண்டபமா?, கனவுகளின் களஞ்சியமா?, டாலர்களின் சேமிப்பா?, ரூபாக்களின் தர்மமா?, வருடங்களின் பயணமா? கடிகார முட்களின் சத்தமா? இப்படி, ஒவ்வொரு மனிதனின் நம்பிக்கை மற்றும் எண்ணங்கள் மூலம் ஆளுக்கு ஆள் மாறுபட்ட தனித்துவமான தத்துவத்தின் செல்லப் பெயர் 'வாழ்க்கை'.

இப்பூமியில் சமத்துவம் என்ற ஒன்று நிச்சயம் இல்லை; ஆதலால், நீங்கள் ஒரு யுத்தம் போல வாழ்க்கையை எண்ணிக் கொள்வீர்கள். போராளி போல உணர்வென்ற கவசங்களை அணிவீர்கள். நீங்கள் நினைப்பது தவறென ஒப்புக் கொள்ளுங்கள். பூக்களைப் பறிக்க கோடரிகள் தேவையில்லை. மகிழ்ச்சி, தெருவிலுள்ள   நாய்க்குட்டிக்கு ஒரு பிஸ்கட் போட்டு விட்டுப் போவதில் கூட இருக்கிறது; அறிமுகமற்ற மனிதனைப் பார்த்து புன்னகை செய்வதில் கூட ஒளிந்துள்ளது. புத்தனைப் போல வாழ்க்கையை தேடி நீங்கள் பல மைல்கள் நடக்கத் தேவையில்லை; சாளரத்தை திறந்து பார்க்கும் போது குட்டிக் குட்டி தீப்பெட்டிகள் போல அடுக்கப்பட்டிருக்கும் வீடுகளுக்குள் வாழ்கின்ற மக்களை சந்தித்துப் பழகுங்கள்; முத்திரைகள் போல மனதிற்குள் நல்ல மனிதர்களை சம்பாரித்து, நினைவுகளை ஹைக்கூ கவிதைகள் போல சேமிப்பதில் புத்தனின் தேடலைப் போல நெறியான வாழ்க்கையுள்ளது.

என் நண்பன் ஒருவன் பலூன்களுக்குள் சுவாசங்களை நிரம்பி பத்து ரூபா தொடக்கம் நூறு ரூபா வரை விதவிதமாய் பலூன்கள் விற்றுக் கொண்டிருந்தான். வாழ்க்கையில் எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ? அவ் எல்லை வரை என் நண்பனின் கால்கள் ஓயாமல் நடந்தன. ஒரு நாள் போல மறு நாள் இல்லை என்பது போல ஐம்பது ரூபா தொடக்கம் ஐநூறு ரூபா வரை சம்பாரிக்கும் தினக்கூலியை முயற்சி என்று நம்பினான். 'இன்று மூச்சடைக்கப்பட்ட பலூன்கள் நாளை   நாறிப் போவதில்லை' என்ற தத்துவத்தின் வழியே, நிம்மதி என்ற ஒன்றுக்குள் எளிமையான தொழில் செய்யும் என் நண்பனின் கனவு, கற்பனை, மற்றும் நம்பிக்கை என்பன, ‘வாழ்க்கை’ என்றால் என்னவென்று எனக்கு கட்டணங்கள் இன்றி கற்றுக் கொடுக்கிறது.    

மன நிம்மதி என்ற தேவாலயத்தை விட்டு தயவு செய்து வெளியேறாதீர்கள். முட்களுக்கு நிறம் தீட்டி வானவில் என்று பொய் கூறி விற்பனை செய்கிறார்கள். கவர்ச்சிகள் கானல் நீரைப் போல நிலையற்றவை என்று மனதினுள் உறுதி கொள்ளுங்கள். தங்க மலை இருப்பவனிடம் நதிகள் இருக்கிறது; மாறாக, கூழாங்கல் இருப்பவனிடம் கடலளவு தாகமிருக்கிறது. கறுப்பின மக்களின் ஒரு நாளை நினைத்துப் பார்க்கையில், மனிதன் என்ற வகையில் என் கண்களில் கசியும் சின்னச் சின்ன கண்ணீர்த்துளிகளை ஒரு டம்ளரில் சேமித்து, ஆப்பிரிக்க மக்களுக்கு ஏற்றுமதி செய்வது போல என் மனம் ஒரு கற்பனைக் கவிதை எழுதுகிறது.

முதல் முயற்சியிலேயே வெல்ல வேண்டுமென்று எதற்காக நினைக்கிறீர்கள்; எண்ணங்கள் தோற்றுப்போன பின் தற்கொலை செய்ய முனைகிறீர்கள். தயவு செய்து மனங்களை நம்பிக்கையால் சலவை செய்து கொள்ளுங்கள். இருளுக்குள் குருடாகிக் கிடந்த பூமியை ஆயிரம் தோல்விகளுக்குப் பின் வெளிச்சத்திற்குள் அழகாக்கிப்  பார்த்தது ஒரு முட்டாளின் சாதனை என்று மின்குமிழ்களின் வெளிச்சம் கற்பிக்கவில்லையா? முதல் முயற்சியில் வெல்பவன் அத்திவாரத்தை மட்டும் தான் கட்டிக் கொள்கிறான்; ஆனால், எண்ணற்ற தோல்விகளின் மேலே வசித்த படி, ஓயாமல் முயற்சி செய்பவன் சாதனை என்ற மாடமளிகையை கட்டிக் கொள்கிறான். நகங்களை வெட்டி வீசுவதைப் போல முடியாமை என்ற கள்ளிச்செடியை மனதிற்குள் வளர விடாமல் பிஞ்சிலேயே பிடுங்கி வீசி விடுங்கள்.   

இடம், பொருள், ஏவல்களை கச்சிதமாக தீர்மானித்துக் கொள்ளுங்கள்; குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்வதை விட கடலலைகளுக்குள் நீச்சலைக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கனவுகளுக்குள் இலட்சியங்களை தேடி ஆழம் மூழ்கி விட்டால், எப்படி எதிர்நீச்சல் போடுவது என்று தங்கமீன்களிடம் கற்றுக் கொள்ளுங்கள். கடலுக்குள் நீச்சல் கற்ற தங்கமீன்கள் தான் கண்ணாடிக் குவளைக்குள் மூப்படையும் வரை நுரை முட்டைகள் விடுகின்றன.

வாழ்க்கையில் கனவுகள் இயல்பானது. இருந்தும், கற்பனைகளை மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்; சின்னச் சின்ன சேமிப்புக்களை நேசியுங்கள். "குழந்தையின் பிறந்த நாளுக்கு ஒரு பொம்மை வாங்க, காதல் மனைவிக்கு இரு ரோஜாக்கள் பரிசளிக்க, வயது போன அம்மாவுக்கு ஒரு மூக்குக் கண்ணாடி, அப்பாவுக்கு ஒரு அழகான சட்டை மாட்டி விட, பொருளியல் தட்டுப்படும் காலங்களில் சேமிப்புக்கள் கூட மனிதனின் வாழ்க்கையில் ஒரு நண்பனைப் போல மாறி விடுகிறது."

நாளைக்காக காத்திருந்து கையிலுள்ள இந்நாளை வீண்விரயம் செய்யாதீர்கள்; நதிகள் ஒரு போதும் பின்னோக்கி ஓடுவது கிடையாது. பொறுமை என்ற பொக்கிஷத்தை ஒரு புதையல் போல உணர்வுகளுக்குள் புதைத்துக் கொள்ளுங்கள். கோபம் ஒரு மிருகம்; ஆதலால், அம்மிருகத்தை மனதினுள் வளர விடாமல் பேரன்பினால் நிவர்த்தி செய்யுங்கள்; முதுகுக்குப் பின்னால் குத்த நினைப்பவனையும் நீங்கள் காட்டும் பேரன்பு மனிதனாக மாற்றி விடும்.  பகைவனைக் கூட நண்பனாக்கிக் கொள்ளுங்கள்; மனதளவில் யாரையும் காயப்படுத்தி இருந்தால், அவர்களை நாடிச் சென்று மன்னிப்புக் கோருங்கள்; துரோகியைக் கூட மன்னித்து விடுங்கள். எனவே, வாழ்க்கை ஒரு முறை தான். ஒரு விபத்தில் சிக்கி உயிருக்காக நான் போராடிய போது தான் வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்து கொண்டேன்; என் அனுபவங்களால், நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள், தோற்றுப்போன ஒரு நண்பனின் மனதினுள் நம்பிக்கை என்ற ஒரு விதையை நடுவது போல எப்பயாவது ஆறுதல் கூறியுள்ளீரா?, பார்வையிழந்த ஒரு மனிதனின் கைகளைப் பற்றி எப்பயாவது மஞ்சட் கடவையைக் கடக்க உதவியுள்ளீரா?, நீங்கள் வென்ற மெகா பரிசில் இருந்து பத்து டாலர்களாவது தர்மம் செய்துள்ளீரா?, மற்றவர்களின் வெற்றியை கள்ளம் கபடமின்றி நீங்களே! வென்றது போல மனதளவில் கொண்டாடியுள்ளீரா?, வயதான பெற்றோர்களை கண்ணியமாக பராமரிக்கின்ரீரா?, இவற்றுள், ஒன்றையேனும் இன்று வரை நீங்கள் செய்யவில்லை எனில், நீங்கள் இன்னும் வாழத் தொடங்கவில்லை. இனியாவது, வாழ்க்கையை வயதுகளால் வீண்விரயம் செய்யாமல் வாழத்தொடங்குங்கள்.
***

Translation

Tittle: Life is a color changing dew

What is life? Are they bubbles of fish which swim in the river of heart? Is it a 7-day love story between the flower and thorn? Is it a taste of smiles in human lips? Is it a friendship of tears in cheeks? Is it a drawing hall of grand memories?  Is it a store room of dreams?  Is it a saving of dollars? Is it a charity in rupees? Is it a travel of years? Is it a sound of clock? Like this, “Life” is the nickname of unique philosophy of every man’s confidence and opinions.

The earth has no equality. Hence, you will think life is a war. You will wear the feeling shields. Agree that your thought is wrong. We don’t need axe to pick flowers. Happiness is giving biscuits to the street dog, smiling at stranger. You don’t need to walk miles like Buddha in search of happiness. Meet the people who live in the apartments. Save the good people in heart like stamps, and store some memories as haiku. There is moral life like Buddha’s life.

One of my friend, who is selling balloons filling the in it from ten rupees to hundred rupees. My friend walked at the end of the life. I learned what is life without any charge from my friend’s simple and satisfying life. He believed that earning from fifty rupees to five hundred is an effort. A day is not alike the other day. The balloons filled with breaths today will not be spoiled tomorrow. 

Don’t get out from peace of mind. They are selling the colored thorns as rainbow. Attractions are temporary like mirage. A man has the gold mountain who has the river. Rather, a man who has pebbles is in thirsty. When I think about a day of black people, as a human I save the tears in cup to export to African people, my heart is writing a poem. Why do you wish to win at first try? When your wishes become failure then you try to commit suicide. Please wash your hearts by confidence. Didn’t you learn the success from the lights of bulbs? That is a victory of a foolish man. A man who success at first try builds only a basement. But, the man who lives in failure and keep trying without giving up builds a palace. Cut and throw the disability like cutting the nail. Decide your talents and abilities perfectly. Learning to swim in the sea wave is better than in the pond. If you drown in the sea by searching aims, learn how to swim again from the golden fish.

In life, dreams are natural but limit the imaginations. Love small savings. To buy a doll for your baby’s birthday, to present two roses for loving wife, a spectacle for aged mother, a shirt for father. When we face difficulty economically, the savings become like a friend.

Don’t waste this day while waiting for tomorrow. The rivers do not reverse. Tolerance is treasure. Dump it in the feelings. Anger is a beast. Don’t let it grow. Cover it with love. The love you shower will change the traitor who wants to kill you from your behind. Make your enemy as friend. If you hurt someone, go and ask forgiveness. Forgive the traitor. Life is one time. You will live it once. I realized what life is when I met and accident. You also understand that by my experience.

Have you ever consoled your friend who failed by giving confidence? Have you ever helped a blind man to cross the pedestrian crossing? Have you ever given ten dollars for charity from the money you won from mega lottery prize? Have you ever celebrated other’s victory as yours? Do you look after your old parents respectfully? If you did not do one thing from these, you did not start to live. At least after this, start to live life without wasting it by counting days.  
***

 


Comments

Fliss's picture
Mohamed, congratulations on this fine and insightful piece of writing. I like the questioning style at the beginning, which draws me in and engages; also the emphasis on lived experience, particularly in your closing paragraph. Looking after one's parents is important to me too. Best of luck for the contest, from Fliss :-)

Report SPAM

  

MyNAh_27's picture
Mohamed, First and foremost congratulations on your recent Member Poem Of The Day Award with You Don’t Throw Pennies. Your entry this week is a magnum opus in every strict sense of the word. Breathtakingly awesome, artistically sound. Best of luck with this M

Report SPAM